இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்ணான்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு பேரவை நேற்றிரவு சபாநாயகர் மஹிந்த யாபா அபேரவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது, பிரதம நீதியரசராக முர்து பெர்ணான்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அதற்கமைய அரசியலமைப்பு பேரவையும் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அந்தவகையில், இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்ணான்டோவை நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.