TamilsGuide

1650 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு

இலங்கை கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, 1650 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் கடந்த 14 ஆம் திகதி அதிகாலை இந்த ரோத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போது, 1650 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் படகொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக 6 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் ஹெரோயின் கடத்தலுக்கு பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் நேற்று காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது, 66 கிலோ 840 கிராம் ஹொரோயின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18-34 வயதுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படனாது போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment