61.56% வாக்குகள்.. அமோக வெற்றி - இலங்கை பாராளுமன்ற அதிகாரத்தை தக்கவைத்த அதிபர் திச நாயகா
இலங்கை
இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் அனுரா குமார திச நாயகா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) கட்சி முன்னிலை வகித்தது.
இதைத் தொடர்ந்து நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகித்து வந்தது. எதிர்கட்சிகளை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தது.
பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்களும் சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. இந்த மேஜிக் எண்ணை அக்கட்சி எளிதில் எட்டி பிடித்தது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் அனுரா குமார நித நாயகா தலைமையிலான கூட்டணி 141 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாராளுமன்ற அதிகாரத்தை இந்த கூட்டணி தன்வசப்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 61.56 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெற்றது.