தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூல் ரீதியாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, 'ஓடிடி தேதியை இன்னும் தள்ளிவையுங்கள்; திரையரங்கில் நல்ல வரவேற்பு உள்ளது' என்று திரையரங்கு உரிமையாளர்களே சிவகார்த்திகேயன் மற்றும் அமரன் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் தாம்பரம் பகுதியில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதற்காக பெருங்களத்தூரில் உள்ள மேம்பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் கீழே குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, சிவகார்த்திகேயனைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டது.
வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று கொண்டு சூட்டிங்கை வேடிக்கை பார்த்தனர். அதனால் வண்டலூர், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.