மன்னாரில் இன்று 6 தேர்தல் முறைப்பாட்டு சம்பவங்கள் பதிவு
இலங்கை
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தேர்தல் வாக்கு பதிவுகளின் போது 6 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மன்னார் மாவட்ட தேர்தல் நிலவரத்தை பொறுத்த வரையில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவர படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.
அதே நேரம் தேர்தல் தொடர்பாக இன்றைய தினம் மாத்திரம் 6 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எவ்வாறாயினும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.