வாக்களிப்பு நிலைய கடைமையில் இருந்த இருவர் உயிரிழப்பு
இலங்கை
வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
அதற்கமைய, கெஸ்பேவ வாக்களிப்பு நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 48 வயதான அவர் பயாகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.
மேலும், கொபேகனே பிரதேசத்தில் 57 வயதுடைய வாக்களிப்பு நிலைய ஊழியர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.