ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டேடன் வத்த பகுதியில் இன்று (12) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றோடு, வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனின் சாரதி படுகாயமடைந்து வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுக்கு எதிர்திசையில் கினிகத்தேனயிலிருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக பயணித்த வேனுக்கு முன்னால் சென்ற முச்சக்கரவண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸீம், வேனும் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.