TamilsGuide

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய அப்டேட்

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது.

தேர்தலில் மொத்தம் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையோர் ஆவார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்காளர் அட்டை பெறாமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பின்வரும் ஆவணங்கள் அதற்கு பொருந்தும்:

* தேசிய அடையாள அட்டை
* செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
* செல்லுபடியாகும் வாகன சாரதி உரிமம்
* பொது சேவை ஓய்வூதிய அட்டை
* முதியோர் அடையாள அட்டை
* தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்
* மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
* சாதாரணவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 64,000 ஆகும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின்வாக்குப்பதிவை கண்காணிக்க உள்நாடு வெளிநாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களும் இணைந்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுபொருட்களும் இன்று தொடக்கம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என அதன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாளை (14) ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திணைக்கள அதிகாரிகள் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் சேவைகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment