தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் முதல் கூட்டம் இன்று
இலங்கை
புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் நன்மைகளை ஈட்டித்தரக்கூடிய, வலயத்தின் வளர்ச்சி கண்ட நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பலப்படுத்தல் தொடர்பிலான தனது அர்ப்பணிப்பு மற்றும் நோக்கத்தை வௌிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பிலான தலைமை ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஹான்ஸ் விஜயசூரிய அதன் நிறைவேற்று அஸ்தஸ்த்தற்ற தலைவராக இதில் செயற்படுவார்.
அத்துடன் சஞ்ஜய கருணாசேன,ஹர்ஷ புரசிங்க,சந்திம குரே,பந்துல ரணதுங்க,ஜெப்ரி சுல்பர், சாமிஸா அபேசிங்க, ஷானுக ரெபெல் ஆகியோர் தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களாவர்.