பாரதியார் என்பதன் பொருள்
சினிமா
பாரதி என்பதற்கு இரண்டு பொருள்.. ஒன்று கலைமகள் – அதாவது, சரஸ்வதி. சிறுவயதிலேயே சொற்சுவை, பொருட்சுவை நிறைந்த பாக்கள் புனைந்து பாரதி என்ற பட்டம் பெற்றதுடன், அந்தக் கலைமகளே வந்து உதித்தைப்போல மேதாவிலாசத்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்த கவிதைகள், கட்டுரைகளை எழுதி தமிழருக்கு ஞானமூட்டிய அவர் ஆண் வடிவிலான சரஸ்வதி என்பதில் சந்தேகமில்லை. பாரதிக்கு மற்றொரு பொருள், போர்க்களத்திலே பேயாட்டம் போடும் காளி. ‘பேயவள் காணெங்கள் அன்னை’ என்று அன்னை பராசக்தியைத் தாம் பாடியதைப்போலவே, சமூக அவலங்களைக் கண்டதும் அதனைக் கொன்றழிக்கும் கொற்றவையைப் போன்ற ஆவேசம் கொள்பவர் பாரதியார். அவ்வகையில், தம் பெயருக்கேற்ப இரு விதங்களிலும் சுப்பிரமணிய பாரதியார், பாரதியாகவே வாழ்ந்தார்.
பாரதி+ஆர்( சிறப்பு விகுதி) இவர் இயற்பெயர் சுப்பிரமணியன்.அழைக்கும் பெயர் சுப்பையா.