வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் இருவர் கைது
இலங்கை
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 47 மற்றும் 48 வயதுடைய சீன பிரஜைகள் எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.