• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு

இலங்கை

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத்  தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கமையை, வாக்கு எண்ணும் நடவடிகைகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேபோல், தேவையின்றி வெளியில் நடமாடுதல், கொண்டாட்டங்களில் ஈடுபடுதல் போன்ற அவசியமற்ற செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் வீடுகளிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை அவதானிக்குமாறும் அவர் அறிவித்தார்.

மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசி, உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமையை வாக்கெடுப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டது என்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply