தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
இலங்கை
பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்து முறைப்பாடுகளும் சட்ட விதிமீறல்கள் தொடர்பானவை என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2811 என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் முறைப்பாடுகளில் சட்ட மீறல்கள் தொடர்பான 2756 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பான 20 முறைப்பாடுகளும் 35 இதர முறைப்பாடுகளும் அடங்குகின்றன
அத்துடன் 2162 முறைப்பாடுகளு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 649 முறைப்பாடுகளு தீர்வு காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.