• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அமைச்சர் விஜித ஹேரத் திடீர் விஜயம்

இலங்கை

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானங்களின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் பிரிவு ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

24 மணி நேரமும் விமானம் தாமதம் ஏற்படுவது தொடர்பில் பயணிகளுக்கு உடனடித் தகவல்களை வழங்கவும், தாமத காலத்தில் பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்கவும் விமான நிலையம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவு ஒன்று விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த காலதாமதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தேசிய விமான நிறுவமான, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்து செய்திருந்தது.

எவ்வாறெனினும் விமானத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீர் செய்வதற்கு தமது குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வழக்கமான விமான பயண அட்டவணையை விரைந்து மீட்டெடுக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்திருந்தமையும் குறிப்படத்தக்கது.
 

Leave a Reply