வெற்றி மீது வெற்றி.. ஸ்விங் ஸ்டேட்ஸ் அனைத்தும் கிளீன் ஸ்வீப் - இறுதி முடிவு வெளியீடு
உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடித்து அபார வெற்றி பெற்றார்.
அமெரிக்க தேர்தல் நடைப்முறைப்படி 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்கள். அந்த வகையில் 50 மாகாணங்களில் 49 மாகாணங்களின் டிரம்ப் 301 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 226 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வெற்றியை மாகாணங்களாக வகைப்படுத்தப்பட்ட ஸ்விங் ஸ்டேட்ஸ் வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவையும் இந்த முறை டிரம்ப்புக்கு அமோக ஆதரவளித்துள்ளன.
இதில் அரிசோனா மாகாணத்தில் முடிவு மட்டும் வெளியாகவில்லை. அங்கு அதிகளவில் தபால் ஓட்டுகள் பதிவானவதால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
இந்த நிலையில் மற்ற 6 ஸ்விங் மாகாணங்களில் வெற்றி பெற்ற டிரம்ப் தற்போது அரிசோனாவிலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாகாணங்களின் தேர்தல் முடிவுகளில் டிரம்பின் வாக்கு எண்ணிக்கை 312-ஆக உயர்ந்தது. கமலா ஹாரிஸ் 226 வாக்குகள் பெற்றார்.
இதற்கிடையே வருகிற 13-ந்தேதி டிரம்ப்-ஜோபைடன் அதிகார பரிமாற்றம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார்கள். வரும் ஜனவரி மாதத்துடன் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.