தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்த 'சலார்' திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூலை குவித்தது.
இந்நிலையில் சலார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகமான சலார்- Ceasefire கதை இரண்டாம் பாகத்தில் வர இருக்கும் வெயிட்டான சம்பவத்திற்கான முன்கதை போலவே அமைத்திருந்தது. இதற்கு மேலும் ஹைப் கொடுக்கும் அளவுக்கு மாஸ் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதவாது பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ [மா- டோங் -ஸோக்] சலார் 2 படத்தில் இணைந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான தி கேங்ஸ்டர் - காப் - அண்ட் தி டெவில் படதின்மூலம் உலக அளவில் அறியப்பட்ட டான் லீ ரியல் கேங்ஸ்டர் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய நடிப்பை வெளிப்படுத்துபவர்.
சலார் படமும் கேங்ஸ்டர் கதைக் களத்துடன் நகரும் படம் என்பதால் டான் லீ வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சலார் 2 படத்தில் நடிப்பதைத் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரி மூலம் டான் லீ தற்போது உறுதி செய்துள்ளார்.