இலங்கையின் 10வது நிறைவேற்று ஜனாதிபதி ரஞ்சன் ராமநாயக்க – நந்தசேன அளுத்கே உரை
இலங்கை
நாட்டின் பிரதான அரசியல்கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்
பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்கூட்டணியின் மற்றுமொரு வெற்றிப்பேரணி களுத்துறை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றது
ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ண டில்ஷானின் ஏற்பாட்டில் பேரணி இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்ததுடன் இதன்போது பேரணியில் கலந்து கொண்ட மக்கள் உற்சாக வரவேற்பளித்திருற்தனர்
பேரணியில் பெருமனவான மக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவையினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய களுத்துறை மாவட்ட வேட்பாளர் ஜயந்த ”இவ்வாறான ஒரு தலைவர் முன்னதாகவே கிடைத்திருந்தால் ரஞ்சன் ராமநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பார். எனவே மக்களுக்கு மீண்டும் ஒரு தடவை சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பொதுத்தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் வெற்றிபெற்று நாடாளுமன்றில் அதிக ஆசனங்களை வெற்றிகொள்ளும் பட்சத்தில் ஊழலற்ற அரசியல் கலாசாரம் உருவாகும்” என தெரிவித்தார்.
அதேநேரம், இந்த நாட்டின் 9 ஆவது ஜனாதிபதி ஆட்சியில் இருந்து வெளியேறும் போது இந்த நாட்டின் 10 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவு செய்யப்படுவார். ரஞ்சன் ராமாநாயக்க கடந்த காலங்களில் தேர்தலில் வெற்றிப்பெற்று ராஜாங்க அமைச்சு பதவியினை வகித்த காலப்பகுதியிலும் அவர் தேவையற்ற வகையில் நிதியினை செலவிடவில்லை. அவரது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவுமில்லை. நேர்மையாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்காக குரல் கொடுத்த ஒருவர் என களுத்துறை மாவட்ட வேட்பாளர் நந்தசேன அளுத்கே தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய களுத்துறை மாவட்ட வேட்பாளர் நாரங்வில தேரர் ”இந்த நாட்டில் ஊழல் மோசடிகள் நிறைந்துள்ளன. மக்கள் அதனை மாற்றியமைப்பதற்கான நேரம் வந்துள்ளது. களுத்துறை மாவட்டத்தினை பொறுத்தவரையி;ல் கடந்த காலங்களில் குடு;ம்ப ஆட்சியே நிலவிவந்தது. ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியில் ஊழல்வாதிகள் இல்லை மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுபவர்களும் இல்லை என்று குறிப்பிட்டார்.