ஐக்கிய ஜனநாயகக்குருல் நாடாளுமன்றில் மக்களின் குரலாக செயற்படும் என்கிறார் திலக்கரட்ண டில்ஷான்
இலங்கை
நாட்டின் பிரதான அரசியல்கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்
பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்கூட்டணியின் மற்றுமொரு வெற்றிப்பேரணி களுத்துறை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றது
இதில் உரையாற்றிய களுத்துறை மாவட்ட வேட்பாளர் பிரதீப் சானக ”நாட்டில் பொறுப்புவாய்ந்த ஒரு எதிர்க்கட்சியை தெரிவு செய்வது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 14 ஆம் திகதி நாட்டு மக்கள் இந்த நாட்டில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அத்தோடு ஐக்கிய ஜனநாயகக்குரலின் தேசிய அமைப்பாளர் திலகரட்ண டில்ஷான் ” அரசியலில் இருப்பினை தக்கவைத்துகொள்தற்காக இன்று பலர் முயற்சிக்கின்றனர். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள. ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி. ஏதிர்வரும் தேர்தலில்; ஐக்கிய ஜனநாயகக்குரல் வெற்றிபெறுகின்ற அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிபெறும். ஐக்கிய ஜனநாயகக்குருல் நாடாளுமன்றில் மக்களின் குரலாக செயற்படும் என தெரிவித்தார்.