எனது மக்களை அரசியல் அநாதையாக விட மாட்டேன் – வடிவேல் சுரேஷ் சூளுரை
இலங்கை
பதுளை -ஹாலியெல -உனுகல பிரதேசத்தில் மக்களை சந்தித்திருந்த பதுளை மாவட்ட ஐக்கிய ஜனநாயக குரலின் வேட்பாளர் மக்களுடன் சுமுகமான முறையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
மக்களின் காணி உரிமை , வீட்டு பிரச்சினை , இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பின்மை , மாணவர்களின் கல்வி நிலை என்பவற்றுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றியமையாததாக இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக ஐந்தாயிரம் , ஐம்பதாயிரம் என பணம் கொடுத்து வந்தாலும், 14ஆம் திகதிற்கு பின்னர் தனது மக்கள் அரசியல் அநாதைகளாக கைவிடப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் , எந்த பிரச்சினை வந்தாலும் முன்வந்து தானே நின்று அதற்கான தீர்வை பெற்றுதருவதற்கு காரணம் தன் மக்களின் பிரச்சினை தனக்கு தெரியும் என்பதால் என தெரிவித்தார். யாரும் தனக்கு அதை கூற தேவையிருக்காது என்று தெரிவித்த அவர், மக்களின் கலை,கலாச்சார, பண்பாட்டையும், மாணவச்செல்வங்களின் கல்வியையும், இளைஞர்களுக்கான வேலை திட்டங்கள் , அவர்களின் இருப்பு தொடர்பாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற நாம் , நாடாளுமன்ற தேர்தலில் தோற்க போவதில்லை என்றும் , மக்களை அரசியல் அநாதையாக்க விடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
தங்களை தோற்கடிக்க பலர் கனவு கண்டுகொண்டிருப்பதாகவும், அது இம்முறை நடக்காது என்றும் அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது மக்களும் தங்களது வாக்கினை ஐக்கிய ஜனநாயக குரலின் பதுளை மாவட்ட வேட்பாளரன வடிவேல் சுரேஷ்க்கே வழங்குவோம் என ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.