• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தல் காலத்தில் வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டு முன்னேற்பாடுகள் தீவிரம்

இலங்கை

வெள்ளத்தினால் அனர்த்த நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக விசேட ஏற்பாடுகளை நாம் செய்துள்ளதோடு, வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம். சுபியான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம் பி எம் சுபியான் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தேர்தல் கள நிலவரம் சம்பந்தமாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற உள்ள நாடாராளுமன்ற தேர்தலில் போது தேர்தல் தினத்தில் அல்லது அதனை அண்மித்த காலங்களில் அதிக மழை வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுமா ஆனால் அது தொடர் பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இராணுவம் கடற்படை பொலிஸ் விமானப்படை பிரதேச செயலகம் உள்ளூராட்சி நிறுவனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறான அனர்த்த நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக  முன்கூட்டியே திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளதகவும் இவ்வாறான அனர்த்தம் ஏதும் ஏற்பட்டு வாக்காளர்களுக்கு அல்லது வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லும் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு, தேர்தல் முடிவடைந்த பின் வாக்களிப்பு தேர்தல் பெட்டிகளை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவர வேண்டிய ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேடமாக வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கக் கூடிய பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள வாகரை ,போரதிவுபற்று, வவுனதீவு ,ஏறாவூர் பற்று,  கிரான் போன்ற பகுதிகளில் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலம் கருத்து தெரிவித்த அவர், தேர்த காலங்களின் போது வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற்பாடுகள் முற்றாக சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது வாக்காளர் களை வாக்களிக்க தூண்டுவதற்காக பணம் அரிசி மதுபானம் பொருட்களை வழங்கு வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது அவ்வாறு வழங்குவது உறுதி செய்யப் பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
 

Leave a Reply