• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக சூப்பர்பவர்கள் பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு எல்லா தகுதியும் இருக்கு - விளாடிமிர் புதின்

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இருப்பதற்கு இந்தியாவுக்கு தகுதி உள்ளது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஷியா தொடர்ந்து பல்வேறு வழிகளில் இந்தியாவுடனான உறவை வளர்த்து வருவதாக தெரிவித்தார்.

"பில்லியன் கணக்கான மக்கள் தொகை, உலகின் அனைத்து பொருளாதாரங்களிலும் வேகமான வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் கொண்ட இந்தியாவை வல்லரசுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்."

"நாங்கள் இந்தியாவுடன் பல வழிகளில் உறவை வளர்த்து வருகிறோம். இந்தியா தலைசிறந்த நாடு. தற்போது மக்கள் தொகை அடிப்படையில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் வரை அதிகரிக்கிறது."

"எங்களது உறவு மற்றும் கூட்டணி எந்த வேகத்தில் வளர்ச்சி பெறும் என்பது இன்றைய கள எதார்த்தத்தை சார்ந்த இலக்கை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எங்ளிடையே ஒத்துழைப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது," என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.
 

Leave a Reply