• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை

இலங்கை

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது

இதன் விளைவாக, சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது

அதன்படி இன்று கொழும்பு மற்றும் கண்டி நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 122 முதல் 130 வரையிலும், குருநாகலில் 118 முதல் 126 வரையிலும் உள்ளது

மேலும், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் நிலைமை சுட்டெண் சற்று சாதகமற்ற மட்டத்தில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது
 

Leave a Reply