• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு துறைமுகத்துக்கு அமைச்சர் விஜித ஹேரத் திடீர் விஜயம்

இலங்கை

கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (07) கொழும்பு, துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

அங்கு சுமார் 2 வருடங்களாக கொள்கலன் அனுமதியில் இழுபறி நிலவி வருவதால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக துறைமுக அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

துறைமுகத்தில் இருந்து கொள்கலன்கள் வெளியேறுவதில் பல குளறுபடிகள் நடப்பதாகவும், டோக்கன் எண் கொடுத்தாலும் அந்த வரிசையில் கொள்கலன்கள் துறைமுகத்தை விட்டு வெளியேறுவதில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், சில சேவையாளர்கள் மது அருந்திக் கொண்டே கடமைகளைச் செய்வதாகவும், சிலர் தங்கள் கடமைகளைப் புறக்கணித்து செயற்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, கொள்கலன் அகற்றும் செயற்பாடுகளை மோசடி, ஊழல் இன்றி சுதந்திரமாக மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
 

Leave a Reply