• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு

இலங்கை

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுமதி தர்மவர்தன, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரம் மற்றும் மனிதவளம் தொடர்பான பொது முகாமையாளர் எலெக்ஷ் மார்ஷல் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது சுமதி தர்மவர்தனவின் புதிய நியமனத்திற்கு பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் ”இலங்கை கிரிக்கட்டில் போட்டி சூதாட்டத்தை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் தற்போதைய நிலை தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

கடந்த ஏழு வருடங்களில் கிரிக்கட் விளையாட்டில் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கைப் பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றத்திற்கு எலெக்ஸ் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களின் கல்வியறிவு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணைகளை பலப்படுத்துவதன் தேவை குறித்தும் அவர் இதன்போது  வலியுறுத்தினார்.
 

Leave a Reply