தாயின் மூன்று விரல்களை துண்டித்துள்ள மகன்
இலங்கை
நபரொருவர் தனது தாயின் மூன்று விரல்களை துண்டித்துள்ள அதிர்ச்சியான சம்பவமொன்று வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, புபுதுவௌ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் தனது தாயின் மூன்று விரல்களையும் மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து துண்டித்துள்ளார் எனவும் அதன் பின்னர் தனது சகோதரியை கத்தியால் தாக்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான தாய் மற்றும் சகோதரி சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயார் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் அவரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் வெல்லவாய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.