இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர் -வடிவேல் சுரேஷ்
இலங்கை
எம் மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் உரிய தீர்வு கிடைக்கும் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள கிரேக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ‘ இலங்கையை மிகவும் நேசிக்கும் மக்கள் வாழும் பிரதேசமாக பதுளை மாவட்டத்தின் பட்டாரவளை பிரதேசம் காணப்படுகின்றது.
குறிப்பாக பட்டாரவளை பிரதேசத்தில் வசித்து வரும் கிரேக் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் நல்ல உள்ளம் உடையவர்கள். அத்துடன் சிறந்த புத்தி கூர்மையுடையவர்கள். அதுமட்டுமல்லாது இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் சிறந்த கல்வி அறிவுடையவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
எவ்வாறு இருப்பினும் அவர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
அது மட்டுமல்லாது இப்பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஒழுங்கான பாதை வசதி இல்லை. இதனால் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இப் பாதையின் ஊடாக ஒரு கர்ப்பிணித் தாயை பாதுகாப்பாக வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்ல முடியான நிலை காணப்படுகின்றது.
மேலும் ஒழுங்கான வீட்டுத் திட்டங்களும் இங்கு இல்லை. எதிர்வரும் காலத்தில் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” இவ்வாறு பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.