கனடிய வீட்டு உரிமையாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி
கனடா
கனடாவில் வீட்டு உரிமையாளர்கள் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வீட்டு அடமான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் போது அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைத்த போதிலும் வீட்டு உரிமையாளர்களினால் அடமான தவணைக் கடனை செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் அடமான தவணைக் கடன் தொகையை செலுத்த முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அடுத்த ஆண்டிலும் இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் என நிதித்துறைசார் ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்திருந்த போது கடன் பெற்றுக்கொண்ட வீட்டு உரிமையாளர்கள் தற்பொழுது சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.