நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பார்ப்பாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொனறாகலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணி கலந்துகொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயல்பட வேண்டும்.அரசியல்வாதி சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்.அரசியல்வாதி நாகரீகமான சட்டத்தில் இருக்க வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துடன் செயல்படுகின்றோம் தேசிய மக்கள் படையின் முதலாவது வரவு செலவு திட்டத்தில் அரச துறையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும். தனியார் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.கிராமப்புற மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
வறுமை ஒழியும் வரை அவர்களை பாதுகாப்போம். பாடசாலை மாணவர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.நாம் ஆட்சிக்கு வந்து சிறிது நாட்களிலேயே உர மானியம் பதினைந்திலிருந்து இருபத்தைந்தாயிரம் ஆக உயர்த்தப்பட்டது. மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டது.
ஓய்வூதியர்களின் சம்பளம் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மூவாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கல். இந்த நாட்டை தூய்மையான நாடாக மாற்றும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி செயல்படுத்தி வருகிறது, சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப பாடுபடுவோம், நாட்டு மக்களின் சுதந்திரத்தை தேசிய மக்கள் சக்தி உறுதி செய்துள்ளது” இவ்வாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.