TamilsGuide

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை- 9 பேர் உயிரிழப்பு

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன.

அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில், சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதில், வீடுகள் எரிந்து 9 பேர் பலியாகியுள்ளனர். நெருப்புக்குழம்பு வெளியேறுவதால், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் எரிந்து சாம்பலாகின.

சிதைந்த வீடுகளுக்குள் சிக்கி பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.
 

Leave a comment

Comment