TamilsGuide

மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சி நிறுத்தம்

இலங்கை மின்சார சபையை (CEB) தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி CEB இன் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும், வாடிக்கையாளர் திருப்திக்கான உயர் மதிப்பைப் பேணுவதற்கும், நிறுவனத்திற்கு நியாயமான இலாபத்தைப் பெறுவதற்கும், சமூகப் பொருளாதாரத்திற்கு உயர் நன்மைகளைப் பெறுவதற்கும் மற்றும் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குமான நிறுவன சீர்திருத்தங்களைச் செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள், பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பை தனியார் மயமாக்காமல் முழுவதுமாக அரசுக்குச் சொந்தமான சுயாதீன அமைப்பில் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அடுத்த ஐந்து வருடங்களில் இலங்கையை பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரச் செலவைக் கொண்ட நாடாக மாற்றுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகளுக்காக அனைத்து ஊழியர்களின் செயலூக்கமான பங்களிப்பைப் பெறுவதற்கு அனைத்து மட்ட ஊழியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டது.
 

Leave a comment

Comment