பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு குறைந்தனவான வாக்குப்பெரும்பான்மையே கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர், தபால்மூல வாக்களிப்பில் சற்றுவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவதாகவும், சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை குறித்து அரச சேவையாளர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”அரசாங்கம் தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்திற்கு தேர்தலில் நூற்றுக்கு 43 வீதமே வாக்குப்பெரும்பான்மை கிடைத்துள்ளது எனவும், எஞ்சியுள்ள 58 வீதம் எதிர்க்கட்சியை சாரும் எனவும், எனவே பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு குறைந்தனவான வாக்குப்பெரும்பான்மையே கிடைக்கும் எனவும் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.