TamilsGuide

ஒக்டோபர் இறுதிக்குள் 1.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 1.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது.

2024 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலங்கையின் திட்டத்துக்கு மத்தியில் ஒக்டோபர் மாதத்திற்குள் நாடு ஏற்கனவே 1,620,715 சுற்றுலா பயணிகளை வரவேற்றுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக 135,907 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் 322,973 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து 146,670 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இது தவிர, ரஷ்யா, ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை வரவேற்றதில் நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
 

Leave a comment

Comment