• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முக்கிய புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்திய கனேடிய மாகாணம்

கனடா

கனேடிய மாகாணமொன்று, இரண்டு முக்கிய புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது.

கனடாவின் கியூபெக் மாகாணம், பொருளாதார புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மாணவர்கள் இரண்டு முக்கிய முக்கிய புலம்பெயர்தல் திட்டங்கள் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு அத்தியாவசிய ஆவணமான கியூபெக் தேர்வு சான்றிதழ் (Quebec Selection Certificates - CSQs) வழங்குவதை இடைநிறுத்தியுள்ளது.

அதனால், வழக்கமான திறன்மிகுப் பணியாளர்கள் திட்டம் (Regular Skilled Worker Program) மற்றும் கியூபெக் அனுபவ திட்டத்துக்கான பட்டதாரி வழிமுறை (graduate stream of the Quebec Experience Program - PEQ) ஆகியவற்றுக்கு புலம்பெயர்ந்தோர் விண்ணப்பிப்பது பாதிக்கப்படும்.

இந்த இடைநிறுத்தம் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

கியூபெக் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

Leave a Reply