வடமாகாண ஆளுநராகப் பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தின் போது, மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண பிரதம செயலாளர், மாகாண காணி ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.