• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் 6.7 சதவீதம் உயர்வு.

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த வருடம் 6.7% அதிகரிக்கவுள்ளது. இது பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும்.

இது பிரித்தானிய பொருளாதார அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸுக்கு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதை வலியுறுத்த உதவுகிறது.

ஆனால், இது Bank of England-ன் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு சவாலாக அமையக்கூடும்.

2025 ஏப்ரல் மாதம் முதல், முழுநேர ஊழியர்கள் வருடத்திற்கு £1,400 கூடுதலாக பெறுவார்கள். காரணம், குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு £11.44 இலிருந்து £12.21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

18 முதல் 20 வயதுடைய இளைஞர்களின் ஊதியம் £8.60 இருந்து £10 ஆக அதிகரிக்கப்படுகிறது, இது இதுவரையிலான மிகப்பாரிய உயர்வாகும்.

இவ்வளவு பாரிய உயர்வு தொழிலாளர் கட்சியின் அனைத்து வயதினருக்கும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியம் ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியா

கும். இளைஞர்கள் வருடத்திற்கு £2,500 கூடுதல் வருமானம் பெறுவார்கள்.

பொருளாதார அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் இதை "நிஜமான வாழ்வாதார ஊதியம்" என்று குறிப்பிடுகிறார்.

இது 3 மில்லியன் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய உதவியாக இருக்கும், ஏனெனில் அனைத்து தொழிலாளர்களும் அதிக வாழ்வாதார செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த உயர்வு நிறுவனங்களுக்கு சேலவினத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதால், பொருளாதார நிபுணர்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிரமம் ஏற்படுமென எச்சரிக்கின்றனர்.  


 

Leave a Reply