TamilsGuide

இளவரசர் வில்லியம் பிரித்தானிய மன்னராகும்போது பட்டத்தை இழக்கவிருக்கும் இளவரசி

மன்னர் சார்லசுக்குப் பின் இளவரசர் வில்லியம் மன்னராகும்போது, இளவரசி ஒருவர் தனது இளவரசி பட்டத்தை இழக்கவிருக்கிறார்.

வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ் மன்னரானபோது, வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம் அவரது மகனான வில்லியமைச் சென்றடைந்தது.

வில்லியம் மன்னராகும்போது, அவரது மூத்த மகனான குட்டி இளவரசர் ஜார்ஜ் வேல்ஸ் இளவரசராவார்.

ஆனால், அப்போது குட்டி இளவரசி சார்லட்டின் வாழ்வில் ஒரு முக்கிய மாற்றம் நடக்கும்.

அதாவது, பிரித்தானிய ராஜ குடும்பத்தைப் பொறுத்தவரை, ஒருவர் இளவரசியாக இருக்கவேண்டுமானால், அவர் ஒன்றில் ஒரு இளவரசரைத் திருமணம் செய்திருக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு இளவரசரின் மகளாக இருக்கவேண்டும்.

ஆகவே, வில்லியம் மன்னராகும்போது, அவரது இரண்டாவது மகளான குட்டி இளவரசி சார்லட்டின் இளவரசி பட்டம் தானாகவே மறைந்துவிடும் என்கிறார்கள் ராஜ குடும்ப விமர்சகர்கள்!

Leave a comment

Comment