TamilsGuide

பதிலடி நடவடிக்கையில் இறங்கினால் ஈரானின் அணுநிலையங்களை குறி வைத்து தாக்குவோம்- இஸ்ரேல் புதிய எச்சரிக்கை

இஸ்ரேல் மீது கடந்த 1-ந்தேதி ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பதிலடியாக 25 நாட்களுக்கு பிறகு ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

ஈரானின் அணு நிலையங்கள் தாக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் ராணுவ தளங்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி கூறும்போது, இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தினால் அவர்களை மிகக் கடுமையாக" தாக்குவோம். அந்த தவறை செய்தால், கடந்த முறை குறிவைக்கப்படாத இடங்களையும் குறி வைப்போம். ஈரானை எவ்வாறு வெற்றி அடைவது, நாங்கள் பயன்படுத்தாத திறன்களைக் கூட எப்படி பயன்படுத்துவது என்பதை நாங்கள் அறிவோம். ஈரானில் சில இலக்குகள் எங்களின் பார்வையில் உள்ளது.

இந்த நிகழ்வு முடிவடையவில்லை, நாங்கள் இன்னும் அதன் நடுவில் இருக்கிறோம் என்றார். இதன்மூலம் ஈரான் அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a comment

Comment