கமல் சார் முன்னாடி என்னால நடிக்க முடியாது - Rolex-ஐ பற்றி சூர்யா கூறியது
சினிமா
சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடித்த திரைப்படம் திரையரங்கில் வெளியாவதால் கங்குவா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ளது.
சூர்யா சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது " ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தின் ஷூட்டிங் வெறும் அரை நாள் தான் நடந்தது. ஷூட்டிங் எடுக்கும் அன்று காலையில் தான் எனக்கு சீன் பேப்பரை கொடுத்தார் லோகேஷ். 20 வருடங்களாக நான் என் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியை எடுக்கவில்லை. ரோலக்ஸ் ஒரு கெட்டவன் அதனால் அதில் நான் எனக்குள் இருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து நடித்தேன். கமல் சார் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதற்கு முன் நடித்து முடிக்க வேண்டும் என எண்ணினேன். ஏனென்றால் அவர் முன் என்னால் நடிக்க முடியாது" என கூறியுள்ளார்.
சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 நடித்து முடித்துள்ளார் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.