• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடிய அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்பு கோரிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி

கனடா

கனடிய அரசாங்கத்தின் சார்பில் பழங்குடியின சமூகத்தினரிடம் பழங்குடியின விவகார அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

ஒன்றாரியோ பழங்குடியின சமூக மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்திற்காக தற்பொழுது அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி மன்னிப்பு கோரியுள்ளார்

1862 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களின் காணிகளை விற்பனை செய்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்த மக்களுக்கு வழங்காது, வேறும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதுடன் அந்த மக்களுக்கு தற்பொழுது நட்டஈடு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply