மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்- திலகரத்ன டில்ஷான்
இலங்கை
மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே திலகரத்ன டில்ஷான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” திருடர்களுடன் இணைந்து அரசியல் செய்ய விரும்பாத காரணத்தினால்தான் இந்த தூய்மையானக் கட்சியில் இணைந்து அரசியல் செய்ய முன்வந்துள்ளோம்.
மோசடியாளர்களுக்கு எதிராக குரல் எழுப்பிய பிரதான நபர்களில் ஒருவராக ரஞ்சன் ராமநாயக்க இருக்கும் ஒருவராக இருக்கிறார்.
நானும் இந்தக் கொள்கையுடன் இருப்பதால்தான் அவருடன் இணைந்துள்ளேன்.எமது தலைவரின் நாடாளுமன்ற பிரவேசத்தை தடுக்க பலர் முற்படுகிறார்கள். இதனால்தான் அவரை காலால் இழுக்க முற்படுகிறார்கள்.
மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு திலகரத்ன டில்ஷான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.