• Welcome to TamilsGuide
செய்திகள் 1

75 வருடங்களாக நாம் செய்த பிழையை இனிமேல் செய்யக் கூடாது! -பெத்தும் கேணர்

இலங்கை

”75 வருடங்களாக நாம் செய்த பிழையை இனிமேல் செய்யக் கூடாது ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின்(United Democratic Voice) கொழும்பு மாவட்ட வேட்பாளர் பெத்தும் கேணர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற  ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பெத்தும் கேணர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடு இன்று புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. 76 வருடங்களாக நாட்டு மக்களை மிதித்துக் கொண்டிருந்த அரசியல் கலாசாரத்தை 2022 இல் நாம் துடைத்தெறிந்துள்ளோம்.

இன்று புதிய கட்சி உதயமாகியுள்ளது. 75 வருடங்களாக நாம் விட்ட பிழையை இனிமேல் விடக்கூடாது. போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஐக்கியத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

இன- மத – பிரதேசமாக பிரிந்து இருந்த காலம் கடந்துவிட்டது. சிஸ்டம் மாற்றத்திற்கு நாம் தயார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றுக்கு நாம் அஞ்சப் போவதிவ்லை. வழக்குகள் ஊடாக இவரது பயணத்தை நிறுத்த முடியாது. மக்கள் எம்முடன் இருப்பார்கள்” இவ்வாறு ஐக்கிய ஜனநாயகக்  குரல் கட்சியின்(United Democratic Voice) கொழும்பு வேட்பாளர் பெத்தும் கேணர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply