மலையக மக்களின் நலன் கருதியே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்
இலங்கை
மலையக மக்களின் நலன் கருதியே ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் முதலாவது பொது மாநாடு,கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த போதே வடிவேல் சுரேஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்துள்ளனர்.