TamilsGuide

கனடாவில் அழுக்கு ஆடையினால் ஏற்பட்ட விபரீதம் - நபரொருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கனடாவில், அழுக்கு ஆடை தொடர்பில் வீட்டில் ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றி கொலையில் முடிந்த சம்பவமொன்றுடன் தொடர்புடைய நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

பெண் ஒருவரை படுகொலை செய்த இந்த நபருக்கு நீதிமன்றம் பத்தாண்டு கால சிறைத்தண்டனை விதித்ததுடன் தண்டனைக் காலத்தின் பின்னர் நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் 39 வயதான ஹார்பீரிட் சிங் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

மனைவியின் சகோதரியான பால்ஜிட் காவுர் என்ற பெண்ணை ஹார்பீரிட் சிங் படுகொலை செய்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்குள் அழுக்கான காலுறை அணிந்தமை தொடர்பில் ஏற்பட் வாய்த்தர்க்கம் குடும்ப முரண்பாடாக மாறி இறுதியில் கொலையில் முடிந்துள்ளது என வழக்கு விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 
 

Leave a comment

Comment