TamilsGuide

பெண் விமானியை காக்பிட்டிற்கு வெளியே வைத்து பூட்டிய விமானி! - ஶ்ரீலங்கன் ஏர்லைன் விமானத்தில் பரபரப்பு

இலங்கை நாட்டை சேர்ந்த விமானி ஒருவர் கழிவறைக்கு சென்ற தன்னுடைய சக பெண் விமானியை காக்பிட்டிற்கு வெளியே வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி-கொழும்பு இடையிலான ஶ்ரீலங்கன் ஏர்லைன் விமானத்தில்(SriLankan Airlines flight)ஆண் விமானி ஒருவர், தனது சக பெண் விமானி கழிவறைக்கு சென்று வந்த சிறிய இடைவெளியில் அவரை காக்பிட்டிற்கு வெளியே வைத்து பூட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 மணி நேரம் நீண்ட பயணம் கொண்ட இந்த விமானத்தில் வழக்கமான விமான நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கழிவறைக்கு சென்ற பெண் சக விமானியை காக்பிட்டிற்கு வெளியே வைத்து ஆண் விமானி பூட்டியதை தொடர்ந்து, கேபின் குழு உறுப்பினர் தங்களது இணைப்பு மூலம் காக்பிட்டிற்கு தொடர்பு கொண்டு பெண் விமானியை உள்ளே அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை விமான போக்குவரத்து ஆணையம் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், விசாரணை முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும், விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட ஆண் விமானியை தற்காலிக பணிநீக்கம் செய்து இருப்பதாகவும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல விமான நிறுவனங்கள் அவர்களது காக்பிட்டில் குறைந்தப்பட்சம் 2 குழு உறுப்பினர்கள்(விமானிகள்) இடம் பெற்று இருப்பதை கட்டாயம் ஆக்குகின்றனர். 

இருப்பினும், தற்போது அரங்கேறியுள்ள சம்பவம் விமானத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் விமானத் தொழிலில் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்த முக்கிய விவாதத்தை தூண்டியுள்ளது.
 

Leave a comment

Comment