TamilsGuide

பொதுத் தேர்தலில் இளைஞர்கள்,மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல்(PAFFREL) அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பெஃரல் அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்”

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகின்றது. நாட்டில் போராட்ட களத்தின் பின்னர் இடம்பெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும்.

நாட்டில் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். எனவே தேர்தலில் இளைஞர்களுக்கும் மகளிருக்கு முன்னுரிமையளிக்குமாறு நாம் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

குறைந்தபட்சம் 2 பெண் வேட்பாளர்களையேனும் முன்னிறுத்துமாறு கோருகின்றோம். 260 நாட்டில் மாவட்டங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேர் போட்டியிட முடியும்.

சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதாயின் அவர்களுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபா மாத்திரமே செலவிட நேரிடும். ஏனெனில் சுயாதீன வேட்பாளர்கள் மாத்திரமே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 2000 ரூபா கட்டுப்பணம் அறவிடப்படுகின்றது.இது மிகவும் குறைந்த கட்டணமாகும்.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களிடம் கட்டுப்பணம் அறவிடப்படமாட்டாது. 196 பேர் மாத்திரமே மக்கள் வாக்கெடுப்பினால் தெரிவு செய்யப்படுவார்கள் ஏனைய 29 பேர் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு ரோஹண ஹெட்டியாராச்சி  தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment