TamilsGuide

ஈரானின் அந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் - டொனால்டு ட்ரம்ப் ஆத்திரம்

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான், இனி பதிலடி என்றால் அது உக்கிரமாக இருக்கும் என்றும் மிரட்டல் விடுத்தது. ஆனால், ஈரானுக்கான பதிலடி உறுதி என்றே இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஈரான், தங்களது அடுத்த நகர்வு விளையாட்டல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்,

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது இஸ்ரேல் குறிவைக்கும் சாத்தியம் தொடர்பில் கேள்வி எழுப்பினால், தமது பதில், கண்டிப்பாக தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் தாக்கம் குறித்து பின்னர் கவலை கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அப்படியான ஒரு தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுப்பது முறையல்ல என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி தளங்கள் அல்லது எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் குறிவைக்கும் என்றே கூறப்படுகிறது.

மேலும், இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை பொது சேவை என்றே ஈரானின் உச்ச தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a comment

Comment