TamilsGuide

நவராத்திரியின் 2 ஆம் நாள் வழிபாடு

நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்று துர்க்கை அம்மனை ராஜராஜேஸ்வரி ஆகவும் கௌமாரியாகவும் ஆகவும் நினைத்து வழிபாடு செய்வதுண்டு.

இன்றைய தினத்தில் நாம் மாலை 05.30 மணியிலிருந்து 09.30 மணிக்குள் வழிபாட்டை செய்து விட வேண்டும்.

இந்த வழிப்பாட்டிற்கு கருப்பு கொண்டை கடலை சுண்டல், புளி சாதம், லட்டு, மாம்பழம் போன்ற பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அன்றைய தினம் நம் அணிய வேண்டிய உடையின் நிறம் மஞ்சளாக இருக்க வேண்டும்.

மேலும் அம்மனுக்கு புடவை சான்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில் மஞ்சள் நிறத்திலான புடவையை சாட்சி வழிபாடு செய்வது என்பது மிகவும் நல்ல பலனை தரும்.

அன்றைய தினத்தில் நாம் அம்மனுக்கு அர்ச்சனை செய்வதற்காகவும், அலங்காரம் செய்வதற்காகவும் துளசி, மரு, முல்லை போன்ற மலர்களை பயன்படுத்த வேண்டும்.

இது தவிர்த்து வாசனை மிகுந்த மற்ற மலர்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக இந்த மூன்று மலர்களும் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினத்தில் வீட்டிற்கு மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை அழைத்து வந்து இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள சொல்ல வேண்டும்.

இந்த வழிபாடு நிறைவு செய்த பிறகு அவர்களுக்கு பிரசாதம் தரும் பொழுது மாம்பழம், லட்டு போன்றவற்றை தர வேண்டும்.
கொலு வைத்து வழிபாடு செய்பவர்கள் காலையில் எளிமையான முறையில் வழிபாடு செய்து கொண்டு மாலையில் இந்த முறைப்படி வழிபாட்டை செய்யலாம்.

இந்த முறையில் வழிபாடுவதன் மூலம் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். ஆரோக்கியமான சுகமான வாழ்க்கையை பெற முடியும்.
 

Leave a comment

Comment