TamilsGuide

இலங்கை அரசுடன் கைகோர்த்த கொரிய எக்ஸிம் வங்கி

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி (Korea Eximbank) இணக்கம் தெரிவித்துள்ளது.

கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தபோதே இந்த இணக்கப்பட்டினை வெளியிட்டனர்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது.

எனவே இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment