TamilsGuide

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பி வைக்கும் நிகழ்வொன்று, இன்று மன்னாரில் ஆரம்பமானது.

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு தபாலட்டைகள் அனுப்பி வைப்பு
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இந்த செயற்பாடு ஆர்பமானது.

தபாலட்டை அனுப்பும் இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள், மத தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு, மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தபால் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.

இந்தத் திட்டங்களின் பாதகத்தையும், இந்தத் திட்டங்கள் மக்களுக்கு எதிரானது என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்த தபால் அட்டைகள் புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, பல தடவைகள் இங்கு வாழும் மக்கள் இந்த செற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தும், கடந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையிலேயே, தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது மன்னார் தீவில் அமைக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை தான் ஜனாதிபதியாக வந்தால் இரத்து செய்வதாக கூறியிருந்தார். இந்த நிலையிலேயே தற்போது இந்த தபாலட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment