TamilsGuide

15 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. 

தளபதி விஜய்யின் படம் என்றாலே கண்டிப்பாக வசூலில் பட்டையை கிளப்பும் என்பதை அனைவரும் அறிவோம்.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த லியோ, உலகளவில் ரூ. 598 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் தான் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் GOAT திரைப்படம் 15 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படிம் தளபதி விஜய்யின் GOAT உலகளவில் 15 நாட்களில் ரூ. 407 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment